Eugenia coryophyllum
(N. O. Myrtaceae)
Habit:
Tree
Parts used:
Bark, Leaves, and Flower buds.
Constituents:
A heavy volatile oil and a camphor resin.
Action :
Antispasmotic, Carminative. Stomachic, Stimulant and Aromatic. Externally oil is an Anti-septic. Local Anesthetic and Rubefacient.
Uses:
Cloves are generally used as spice. Medicinally they are used to correct griping caused by purgatives. It is also used to relieve flatulence, various forms of gastric irritability. colic, dyspepsia, and to increase the flow of saliva. Lavengathi churnam, made of cloves, dry ginger, black pepper and fried borax taken in equal measure is useful in bronchitis. Cloves heated over flame and kept in the mouth, juice swallowed improves the breath and relieves sore-throat also strengthen the gums.
இலவங்கம் சம்பாரப் பொருட்களில் ஒன்று. இது கிராம்பு. அஞ்சுகம், சோகம், திரளி, வாராங்கம் என்ற வேறு பெயர்களாலும் வழங்கப்படுகின்றது. சுவையும், மணமும் தரும் இதை ஊறுகாய். பற்பொடி, வாசனை புகையிலை ஆகியவற்றில் சேர்க்கிறார்கள்-ஜாவாவில் இதை சிகரெட்டிலும் பயன்படுத்துகின்றனர்.
இது பசியைத் தூண்டி, உடலைத் தேற்றி வாயுவை அகற்றக் கூடியது. இசிவையும் துடிப்பையும் தடுத்து வாந்தியை நீக்க வல்லது. செடியின் மலராத மொக்குகளைப் பறித்து உலர்த்தியதே இலவங்கம் எனப்படும். மருந்து குணம் காக்க இதை லேகியம். சூரணம் க்ருத வகைகள் ஆகிய எல்லாவற்றிலும் சேர்க்கிறார்கள். இலவங்கத்துடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி இலவங்க எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெயானது பல்வளிக்கும் தோல்வியாதிக்கும் நல்லபலன் தருகிறது.
வயிற்றில் வளரும் சிசுவின் தோல் சம்பந்தமான வியாதிக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இலவங்கத்தை நீர்விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலைபாரம், நீரேற்றம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயிலிட்டுச் சுவைத்தால் தொண்டைப்புண் ஆறும். பற்களிள் ஈறு கெட்டிப்படும். இதை தேனியிழைத்து உட்கொள்பவரின் உடலுக்குண்டாகின்ற முக்குற்ற நோய் நீங்கும். இது புண்ணில் சீழ்ப்பிடிப்பதை தடுக்கும். கைகால் நடுக்கத்தை அகற்றும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
