கற்பூர வள்ளி / Anisochilus carnosus

Anisochilus carnosus

(N. O. Labiatae)

Habit:

Herb

Parts used:

Leaves

Consiltuents:

Volatile essential oil

Action:

Volatile ott is Stimulant, Diaphoretic and Expectorant.

Uses:

Fresh juice of the leaves mixed with sugar candy are given to children in coughs. It increases sweating. If sugar and gingelly oil is added to the leaf extract and made in-to a mixture, this forms a cooting liniment for the head and this is useful in treating cold and phlegmatic diseases of the children. To calcify banana, the leaf extract is used. If the Jeaf juice is consumed three times a day for three days, cold could be cured. If the squeezed leaves are applied in the forehead, it releives head ache.

கார்ப்புச் கவையும் வெப்பத்தன்மையும் உடையது. இது வெப்பமுண்டாக்குதல் வியர்வைப்பெருக்குதல், கோழையகற்றுதல் போன்ற குணங்களை உடையது. சுற்பூரவள்ளியினால் காசம் என்கிற பொடி இருமல், அம்மைக் கொப்புளம், சிலேத்தும தோஷம், புறநீர்க் கோவை, கபக்கட்டு, வாதகடுப்பு ஆகியவை போகும்.

இலைச்சாற்றுடன் கற்கண்டு சேர்த்துக் குழந்தைகட்குண்டாகும் இருமலுக்குக் கொடுக்க குணமாகும். இலைச் சாற்றுடன் சர்க்கரை, நல்லெண்ணெய் சேர்த்துத் தடவிவர உடல் குளிரும். மேலும் தலைக்குத் தடவ ஜலதோஷம் தீரும். குழந்தைகட்கு . கப  தோஷத்தினால் உண்டாகும் பிணிகள் நீங்கும். மேலும் இதன் இலையால் வாழைப்பழம் பற்பமாகும்.

இவ்விலை சாற்றை காலை,மாலை இருவேளையும் அரைடம்ளர் அளவு சாப்பிட மூன்றே வேளையில் ஜலதோஷம் குணமாகும்.

இலையைக் கசக்கிப் பொட்டில் தடவ தலைவலி குணமாகும். சம குழந்தைகளுக்கு ஏற்படும் செங்கிரந்திக்கு இலைச் சாற்றுடன் அளவு குன்றிமணியிலைச் சாறும், வெங்காயச் சாறும் சேர்த்து காலை, மாலை கொடுத்து வர குணமாகும். புகைந்து புகைந்து தோன்றும் இருமலுக்கும் இது நல்லது.

இலைச்சாற்றைக் குழந்தைகளுக்கு கால் அரை தேக்கரண்டி அளவு தாய்ப்பாலோடு சேர்த்துக் கொடுக்க இருமல், நெஞ்சில் கபம் கட்டியிருத்தல், உள்நாக்கு அழற்சி (டான்சில்), நீர்க்கோவை, மாந்தம், சுணை முதலான நோய்கள் அகலும்.

இலைச்சாற்றை நீர்சுண்ட காய்ச்சி ஒரு தேக்கரண்டியளவு பெரியவர்களுக்கும்1/2 தேக்கரண்டி அளவு சிறியவர்களுக்கும் கொடுக்க அம்மைக் கொப்புளங்கள் நீங்கும்.

PranaRaksha Kashaya

75.00
Category:

குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.

Leave a Reply