(அமரக்காய்)
Solanum verbascifolium
(N. O. Solanaceae)
Habit:
Herb or small tree.
Parts used :
Fresh and dried fruit, root.
Constituents:
Alkaloid, Sonanine, Saponin.
Action:
Expectorant, Stomachic, Germicide. Anti-cancer. and Anti-rheumatic.
Uses:
This is a small tree or shrub with white flowers.
Dried fruit is roasted and powdered along with salt is given in the treatment of worm infection of the rectum and biliousness. Decoction made outof its dried fruits cures dysen-tery and piles. This acts as an expectorant. To preserve the fruits, the dried unripened fruits are soaked in curd or
butter-milk with salt during night and dried in the sun during day till it becomes completely dry. They are fried in gingelly oil or ghee and taken as an adjunct to food.
Powdered root bark if inhaled cures head ache, cold, cephalalgia etc. and causes sneezing. Equal quantity of its root, oil cake of Bassia longifolia and root of Loucas aspera are taken and powdered. If this mixture is inhaled it cures diseases caused by the three kinds of humours in the human body system.
சுண்டைக்காய் சிறுமரம் ஆகும். அமரக்காய் பெரிய இலை களையும், வெண்ணிற பூக்களையும், சிறிய உருண்டையான காய் களையும் உடையது. காய், சிறிது கசப்புச் சுவையுடையது. இதில் மலைச்சுண்டை, இராமேஸ்வரச் சுண்டை, முச்சுண்டை, கருஞ் சுண்டை போன்ற பல வகைகள் உள்ளன
இதன் வற்றலை சிவக்க வறுத்துப் பொடித்து உப்புக் கல்லோடு கூட்டிக் கொடுக்க அசீரணம், வயிற்றுப்பொருமல் இவைகள் தீரும். இதை வறுத்துத் தின்ன மலக்கிருமி, பித்த அரோசகம் முதலியவை போகும். கஷாயமாக உபயோகிக்க சீதகக் கட்டு, சீதபேதி, மூலவியாதி கிராணி இவைகள் போகும். இது ஒரு பத்திய உணவாகும். இது கபத்தை அறுக்கும். நெஞ்சு சளி போக்கும்.வாயுவைக் கண்டிக்கும். மலக்கிருமிகளைக் கொன்று ஆசனத்துவார சீதகக்கட்டை போக்கும்.
காய சுண்டைவற்றல் செய்ய, பச்சை சுண்டைக்காயைக் வைத்து பிறகு உப்பிட்டபுளித்த மோர் அல்லது தயிரில் ஊறவைத்து பின்பு காயவைக்க வேண்டும்.
வேர்ப்பட்டையைப் பொடித்து முகர தலைநோய், நீரேற்றம், மண்டைக்குடைச்சல், ஒற்றைத் தலைவலி முதலியவை தீரும்.
சுண்டைவேர். தும்பைவேர், இலுப்பைப்பிண்ணாக்கு மூன்றையும் சமஎடை எடுத்து பொடித்து முகர முப்பிணிகளும் தீரும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
