Artocarpus integrifolia
(N. O. Urticaceae)
Habit :
Tree
Parts used:
Fruit, seeds leaves and root
Constituents:
Fruit contains carbohydrates and albuminoids. Wood contains morin and cyanomaclurin. Seed contain starch.
Action:
Ripe fruit is Demulcent, Nutritive and Laxative. Unripe fruit is Astringent. Seeds, latex and root are Astringent.
Uses:
The leaves, fruits, seeds and roots are of medicinal value. Latex is used in treating night blindness. Vinegar mixed with this latex is used in reducing oedema. Paste of the tender leaves are used externaly for eczema. Enlargement of the liver and dyspepsia could be treated with the leaves of this tree. Tender fruit if consumed it cures thirstyness and fatigue. It increases semen secretion. The fruit decreases the apetite and increases the intestinal gas formation. Wheezing. cough and chest conjestion are produced by this fruit, but it increases the sexual vitality in men.. Seeds of the fruit induces indigestion and constipation. The infusion of the root is anti-dysenteric. Paste of the root is used externally on ulcers and eczema. Juice of the root with pulp of the fruit is made into a paste and this paste could be used externally to cure summer boils and insect bites.
பலா ஒரு மரமாகும். இதில் ஆசினிப்பலா, கடலைப்பலா, வருக்கை பலா என சில வகைகளுண்டு. இதன் இலை,காய்,பழம், விதை, பால், வேர் அனைத்தும் மருத்துவக் குணமுடையன. இதன் காய்கள் அண்ட வடிவாயும், முள்ளு முள்ளாயும் இருக்கும்.
இதன் இலையிலிருந்து பால் வடியும். இப்பாலுடன் வசம்பை பொடி செய்து சாப்பிட மாலைக் கண் நோய் நீங்கும். பாலும், காடியும் சேர்த்து வீக்கத்திற்குப் பூசுவதுண்டு. இலைக் கொழுந்தை அரைத்துச் சிரங்குகளுக்குப் பூசலாம்.
பலா இலையை உண்டால் பெருவயிறும், குன்ம நோயும் நீங்கும். கொழுந்திலையைச் சரும வியாதிக்கு வைத்துக் கட்டலாம்.
இதன் பிஞ்சையுண்டால் நீர்வேட்கையும் அழலையும் நீங்கும். சுக்கிலம் விருத்தியாகும்.
இதன் காய் பசித் தீயைக் கெடுத்து, வாயுவைப் பெருக்கும். கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் இவற்றை வருவிக்கும். ஆண் மையைத் தரும்.
பலாக்கொட்டையை உண்டால் மலச்சிக்கல், அஜீரணம் வரும்.
இதன் வேரைக் குடிநீரிட்டுக் கழிச்சலுக்குக் கொடுக்கலாம். வேரை அரைத்துச் சொறி சிரங்குகளுக்குப் பூச அவை போகும். வேர்ச்சாறும், காயின் சதையும், சர்க்கரையும் சேர்த்து பிளாஸ்திரி மாதிரி செய்து உடம்பில் படரும் அக்கிக்கும், வண்டுக்கடிக்கும் போட லாம்.
பலாப்பழம் கிடைக்கும் காலத்தில் சுளையை நெய் அல்லது தேனில் தொட்டு உண்டு பால் அருந்த உடல் வலுவடைவதுடன் மூளையும் பலப்படும். இதையே நாட்டுச் சர்க்கரையுடன் சாப்பிட சீரணம் எளிதில் ஆகும். களைப்பு நீங்கும். மேலும் உடல்வறட்சியும் இருமலும் தணியும்.
பலா இலையில் நாற்பது நாட்கள் உணவு உண்ண பெருவயிறு குன்மம் குணமாகும். இலையை அரைத்து புற்றுநோய்களுக்கு கட்டிவர அவை குணமாகும். பலாப்பிஞ்சை சிறிதளவு உண்ண தாகமும் சிறுநீர் போவதும் அடங்கும்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioners before taking any Siddha medicines.
