Capsicum annuum
(N. O. Solanaceae)
Habit :
Herb
Parts used:
Fruit
Constituents:
Caprium and solanine.
Action:
A powerful local irritant, heart and general Stimulant, Stomachic and Tonic.
Uses:
This is a small plant. If the fruit is taken.
regularly it produce bloody stools, piles and fistula. There-fore it is not advisable to consume it regularly. If it is taken in recommended quantity it cures indigestion, tastelessness, stomach ache, colic etc. Infusion of this gives relief in chest pain, stomach ache, indigestion, diarrhoea and vomiting. Paste of this with a cloth is used to inflammation If it is applied externally on throat it cures the throat ulcers and boils. It is mixed with garlic and made into paste and applied externally to cure the back pain. powdered chilly sugar and gum arabic is mixed and made into a small balls and chewed to get relief for the irritation of the throat. Asafoetida and camphor is mixed with this and made into a paste with lemon juice and made into tablets. If this tablets are consumed regularly it cures all chronic diseases. Cinnamoumm bark and sugar are added with this plant and made into an infusion. This infusion checks alcoholism. Oleo resins are prepared from this. This exported to foreign countries. Many medicinal active fraction are prepared from this.
இது ஒரு சிறு பூண்டின் காயாகும். இதன் பழத்தை
மிகுதியாகக் கொள்ளின் குருதிப் போக்கும். மூல முளையும், மூலக் கடுப்பும் உண்டாகும். அளவோடு கொள்ளின் மாந்தம், சுவை யின்மை வயிற்றுநோய், வயிற்றை இழுத்துப் பிடித்தல், வயிற்றுப் பிசம் நீங்கும். மேலும் ஆண்மை பெருருமென்பர்.
மிளகாயைக் குடிநீர் செய்து 2 அல்லது 3 வேளைக் கொடுக்க
மார்பு நோய், செரியாமை, கழிச்சல், சுரத்தில் காண்கிற வாந்தி ஆகியவைகள் நீங்கும். உஷ்ணம் தரும். வாத கோபம் நீங்கும்.
இதையரைத்துத் துணியில் தடவி (தோலின் மேல் போட்டு வைக்க, கொப்புளித்து வீக்கம் கரையும். தொண்டைக்கு வெளியிற் பூச, தொண்டைக்குள் எழும்பும் கட்டிகள் உடையும். முதுகு, பிடரி முதலிய இடங்களிலுண்டாகும் நாட்பட்டவலி, வீக்கங்களுக்கு இதைப் பூண்டு, மிளகோடு சேர்த்தரைத்து எண்ணெயில் குழைத்துப் பூச, நோய் நீங்கும். இதன் பொடியுடன், சர்க்கரை, வேலம்பிசின் தூள் சேர்த்து உருண்டைச் செய்து வாயிலிட்டுச் சுவைக்க, தொண்டைக் கம்மல் நீங்கும். இத்துடன் பெருங்காயம், கர்ப்பூரம் சேர்த்து. எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து, சிறு சுண்டை அளவு மாத்திரை செய்து ஊழி நோய்க்குக் கொடுக்கலாம். இதன் செடியுடன் இலவங்கப்பட்டை, சர்க்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க. குடிவெறியின் பற்று நீங்கும், மிளகாயிலிருந்து ஒலியோ ரெசின்கள் தயாரிக்கப்பட்டு சமீப காலமாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதிலிருந்து பலவிதமான மருந்து மூலக்கூறுகளை தயாரிக்கிறார்கள்.
Crazy Bits – Sprouted Ragi Malt – 250g
Sprouted Ragi Malt Mix: Buy the high-calcium, protein-rich powder for strong bones and sustained energy. Enriched with Almonds, Cashews, and Cocoa for superior taste and easy digestion.
Out of stock
குறிப்பு:
இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note:
This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recoganised Siddha practitioners before taking any Siddha medicines.
