(உள்ளி, வெள்ளுள்ளி, வெள்வெங்காயம்)
Allium sativum
(N. O. Liliaceae)
Habit:
Herb
Parts used:
Bulb
Constituents:
It contains vitamin 1, B, C. and protein. Oil is extracted from the garlic. It contains allin and allinase. Allyl propyl disulphide is prepared from the bulb.
Action :
Carminative, Stomachic, Alterative, Stimulant, Expectorant, Anthelmintic, Diuretic and Tonic. Garlic tones up breast and uterus muscles.
Uses:
The bulb of this plant exhibits many medicinal properties. It is used in many “electuaries” and medicines. The juice of this bulb is used as ear drops for clear hearing. Juice if applied in the throat it cures cough and expels the intestinal worms. This has more strong, smell than onion, Small boils, chronic cough, wheezing, intestinal worms, rheumatism, head ache, cold, stomatitis, dysentery and piles could be treated with this. If this is consumed regularly it cures dysentery thematism, gas trouble, hearing problem, dys pepsia and cardiac diseases. It reduces the cholestrol. If pepper. Eclipta alba are added with this, it is a good medicine to reduce abdominal distention. Garlic boiled in cocoanut oil is
a good external application for arthritis. This also could be used as ear drops, to reduce the pain. Salted garlic paste is used externally for sprain. Boiled garlic added with ghee and sugar, checks dysentery. Oil of the garlic is used to treat whooping cough, intestinal ulcers, filiariasis, asthma etc. This cures high blood pressure. Rigidity of the joints could be cured with this.
வெள்ளைப் பூண்டுச் செடியின் கிழங்கு பல மருத்துவப் பயன்களையுடையது. இது பல லேகியங்களிலும் மருந்துகளிலும் சேர்க்கப்படுகிறது. இதன் சாற்றைக் காதிலிட காது சரியாகக் கேட்கும். உள்நாக்கில் தடவ மலக்கிருமிகள் இருமல் முதலியவை நீங்கும். வெங்காயத்தை விட இது அதிக காரம் உடையது.
வெள்ளைப் பூண்டினால் சிறுகட்டிகள், செவிடு, நாட்பட்ட இருமல், இரைப்பு, வயிற்றுப்புழு முப்பிணி, வாதநோய்கள், நீரேற்றத் தலைவலி, வாய்நோய், சீதக் கழிச்சல், போன்ற நோய்கள் குணமாகும்.
பூண்டை அடிக்கடி உணவில் சேர்க்க வாய்பூட்டு நோய், சன்னி-வாதரோகம், சீதபேதி, கபம், வாய்வுத்தொல்லை, காது மந்தம், குன்மம், இருதயநோய், இரத்தத்தில் அதிக கொழுப்புச் சத்து, எலும்பு முறிவு இவற்றை குணப்படுத்தி அறவே ஒழிக்கும்.
வெள்ளைப் பூண்டுடன் மிளகு, கையாந்தகரையிை சேர்த்தரைத்து சாப்பிட வயிற்றுப்புசம் நீங்கும்,
பூண்டை தேங்காயெண்ணெயிலிட்டுக் காய்ச்சி அவ்வெண் ணெயை தேய்க்க வாத வலி, வாத நோய் தீரும். இதையே காதிலிட காதிரைச்சல், காது குத்தல் நீங்கும்.
பூண்டை உப்பிட்டு நசுக்கி எடுத்த சாற்றை சுளுக்குகளுக்குப் பூச குணப்படும்.
இதை வேசு வைத்து நெய், சர்க்கரை கூட்டிப் பிசைந்து உண்ண சீதக்கழிச்சல் குணமாகும்.
பூண்டு எண்ணெய் கக்குவான், குடற் புண். மலேரியா, யானைக்கால், ஆஸ்துமா ஆகியவற்றில் உபயோகப்படுகிறது. இது இரத்த அழுத்த நோயை குணப்படுத்தும். கில்பிடிப்புக்கு பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.
குறிப்பு: இந்தத் தகவல் பண்டைய சித்த புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இது சித்த விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சித்த மருந்துகளையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட சித்த பயிற்சியாளர்களை தயவுசெய்து கலந்தாலோசிக்குமாறு கேட்டுகொள்கிறோம்.
Note: This information is taken from ancient old Siddha books. It’s only for the purpose of Siddha awareness. We strongly recommend that you please kindly consult the recognised Siddha practitioner before taking any Siddha medicines.
